UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:48 PM
பழநி:
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழ்நாடு பிராமண சமாஜம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை:
முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் இன்று (நவ.,28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உறுதியான உத்தரவை தமிழ்நாடு பிராமண சமாஜம வரவேற்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாக தாமதங்களை களைந்து, சட்டத்தின் ஆட்சியை உயர்ந்தது என்பதை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் அழுத்தமாக நிலைநாட்டி உள்ளது. இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
முருக பக்தர்களின் நீண்டகால ஆன்மிக உணர்வுகளுக்கும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தெய்வீகமும் அமைதியும் தவழும் திருப்பரங்குன்றம் தளத்தில் பக்தர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் ஆன்மிக பரவசத்துடனும் தீபத்திருநாளை அமைதியான முறையில் கொண்டாட பிரார்த்திக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
