/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளைக்கும் வருவோம்... திருட்டு கும்பல் துணிச்சல்
/
நாளைக்கும் வருவோம்... திருட்டு கும்பல் துணிச்சல்
ADDED : ஜூலை 08, 2025 01:51 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே திருடிய வீட்டில் நாளைக்கும் வருவோம் என எழுதி சென்ற திருட்டு கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
தோட்டனுாத்து இலங்கை அகதிகள் முகாமில் முல்லை வீதி 5 வது தெருவை சேர்ந்தவர் வீரமலை 65. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
வீரமலை 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றுள்ளார். மனைவியும் 2 வது மகள் மட்டும் வசித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு மூத்த மகளின் வீட்டிற்கு புனிதாவும் சென்றார். ஒரு மகளும் பணிபுரியும் இடத்தின் விடுதியிலே தங்கி விட்டார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பின்பு புனிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் காணாமல் போயிருந்தது.
அதே நேரத்தில் வீட்டிலில் இருந்த கட்டிலில் நாளைக்கும் வருவோம் என எழுதப்பட்டிருந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.