/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெள்ளை பூச்சி பாதிப்பு; தென்னை விவசாயிகளுக்கு ஆலோசனை
/
வெள்ளை பூச்சி பாதிப்பு; தென்னை விவசாயிகளுக்கு ஆலோசனை
வெள்ளை பூச்சி பாதிப்பு; தென்னை விவசாயிகளுக்கு ஆலோசனை
வெள்ளை பூச்சி பாதிப்பு; தென்னை விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : டிச 14, 2025 05:21 AM

வேடசந்துார்: தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சி தாக்குதல் தொடர்பாக தினமலர் செய்தி எதிரொலியாக தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினர்.
வேடசந்துார் தாலுகாவில்1300 ஹெக்டரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சமீப காலமாக ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற சாறு உறிஞ்சும் பூச்சி, வேடசந்துார் நாகையகோட்டை பகுதி தென்னைகளில் தாக்குகிறது . மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கான மரங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முத்தரசு விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினர். அப்போது அவர் கூறியதாவது: ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் வெளியேற்றப்படும் தேன் போன்ற இனிப்பான கழிவு திரவம் இலைகளின் மீது பட்டு கரும்பூசனம் வளர்வதால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். பூச்சிகளின் பெருக்கமும், தாக்கமும் கோடைகாலத்தில் தீவிரமாக இருக்கும். தென்னை மரங்கள் நோயுற்ற தோற்றத்துடன் காணப்படும். ஆனால் மரங்கள் இறந்து விடுவதில்லை. வெள்ளை பூச்சிகளை அழிக்க தென்னங்கீற்றுகளின் அடிப்பகுதியில் நன்கு நனையுமாறு விசைத் தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீச்சி அடிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை தடுக்கலாம். மஞ்சள் நிற பாலிதீன் தாள்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்ட ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 20 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என்றார்.

