/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த சுணக்கம் n ஆமை வேகத்தில் அம்ரூத் திட்டப் பணிகள் n ஆண்டுக்கணக்கில் நடப்பதால் மக்கள் அவதி

ADDED : பிப் 19, 2025 06:45 AM

மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சி, நகராட்சி ,ஊரகப் பகுதிகளுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகள் ஒரு பேரூராட்சியின் மக்கள் தொகையை பொறுத்து 20 முதல் 50 கோடி வரை திட்ட மதிப்பீடாக உள்ளதால் மாநில அளவிலான டெண்டர் கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் டெண்டர் எடுத்த முக்கிய புள்ளிகள் மாவட்டங்களில் சப் கான்ட்ராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கி கொண்டனர்.
பேரூராட்சிகளில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்களை தோண்டி குழாய்களைப் பதித்தும் மாதக்கணக்கில் ரோடு தெருக்களை சமநிலைப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஆத்துார், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள பேரூராட்சிகளில் இப்பணிகள் நடந்து வருகிறது.உயர்நிலை தொட்டி கீழ்நிலை தொட்டி என இத்திட்டத்திற்கென அனைத்து பணிகளும் நடைபெற உள்ளதால் குழி தோண்டப்பட்டு பல மாதங்களை கடந்தும் சில பேரூராட்சிகளில் ஆண்டுகள் கடந்தும் சமநிலைப்படுத்தாமல் குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களில் டூவீலர்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். குழாய் இணைப்பு கொடுத்து முடித்த பின்பு தான் சமநிலைப்படுத்தும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் பொதுமக்கள் கொதிப்பில் உள்ளனர்.