sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு விக்கிரம ராஜா குற்றச்சாட்டு

/

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு விக்கிரம ராஜா குற்றச்சாட்டு

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு விக்கிரம ராஜா குற்றச்சாட்டு

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு விக்கிரம ராஜா குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 24, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:''ஆன்லைன் வர்த்த கத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்'' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா குற்றம்சாட்டினார்.

கொடைக்கானலில் நடந்த சங்க செயற்குழு கூட்டத்தில் அவர் பேசிய தாவது:

ஆன்லைன் வர்த்தகம் மூலம் வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். அயலக நிறுவனங்கள் வளம் பெறுகின்றன. இதை கண்டித்து திருச்சியில் ஆகஸ்ட்டில் அயலக நிறுவனங்களின் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். ஊட்டி, கொடைக்கானலுக்கு விதிக்கப்பட்டுள்ள இ- பாஸ் நடைமுறையை திரும்ப பெற வேண்டும்.

கொடைக்கானலில் விதிமீறல் வர்த்தக கட் டடங்கள் குறித்து ஆய்வு செய்து அரசு சரி செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி.,யால் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டு அதற்கு அரசு அதிகாரிகள் பல ஆண்டு கணக்குகளை கையில் எடுத்து அபராதம் விதிப்பதும், அதை சீர் செய்ய லஞ்சம் பெறும் நிலை உள்ளது. இதை இருமுனை வரியாக மாற்ற வேண்டும்.

தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் மீது சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமை காட்டி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் கோயில், பள்ளி அருகே டாஸ்மாக் கடைகளில் மது விற்பது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.






      Dinamalar
      Follow us