ADDED : ஜூலை 28, 2025 03:19 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி மகாலட்சுமிநகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் 35. பழனி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். கடந்தாண்டு இடையபட்டியை சேர்ந்த வினோதினியுடன் 20, திருமணம் ஆகி  ஒட்டன்சத்திரம் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வந்தார். திருமணம் ஆன ஒரு வார காலத்திற்குள் பார்த்திபனின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்ததால் வினோதினி அவரது செயல்பாடுகளை கண்காணித்து வந்தார். பார்த்திபன் வாட்ஸ்ஆப்பில் பெண்களிடம் பேசுவது, தவறான புகைப்படங்கள் வைத்திருப்பது ஆகியவற்றை ஆதாரங்களுடன் கணவனின் குடும்பத்திற்கு கூறினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. கணவர் குடும்பத்தினர் வினோதினியை வீட்டை விட்டு விரட்டினர்.
இதுகுறித்து வினோதினி மாவட்ட எஸ்.பி.,யிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்தார். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பார்த்திபன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. பார்த்திபனை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.  பார்த்திபன் அடிதடி வழக்கில் கோர்ட்டில் முன் ஜாமின் பெற்று கன்னிவாடி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டும் வருகிறார்.

