ADDED : ஜன 25, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி :   மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோமலிங்கபுரம் அருகே சக்திவேல்  விவசாய தோட்டத்தில் 80 அடி ஆழ கிணறு உள்ளது.
இதில்   காட்டுப் பன்றிகள்  சில தவறி விழுந்தன.   ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் சென்ற வீரர்கள்  2 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 காட்டுப் பன்றிகளை உயிருடன் மீட்டனர். அவை கன்னிவாடி வனப்பகுதியில் விடப்பட்டன.

