ADDED : ஜூலை 07, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மதுரையில் இருந்து துவரங்குறிச்சிக்கு தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக சென்று கொண்டிருந்த கார் கோசுகுறிச்சி- கரையூர் பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற காட்டு மாடு மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காட்டுமாடு கீழே விழுந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. காரில் வந்த 2 பேர் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கால்நடை மருத்துவர்கள் இறந்த காட்டுமாடை பரிசோதனைக்கு செய்து வனப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.