ADDED : மே 27, 2026 08:21 AM

அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் முளையூர் நரசிங்கபுரம் பகுதியில் தென்னை, மா, சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
நேற்று இப்பகுதிக்குள் நுழைந்த 20-க்கு மேற்பட்ட காட்டு மாடுகள் பயிர்களை சேதப்படுத்தின.
விவசாயிகள் கூறுகையில், 'காட்டு மாடுகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரவு நேரங்களில் தோட்டத்து வீடுகளில் தங்குவதற்கே அச்சமாக உள்ளது.
வனத்துறை நிர்வாகம் தடுப்பு வேலிகள் அமைப்பதுடன், வனவிலங்களுக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.
