/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் காட்டு யானைகள்
/
தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் காட்டு யானைகள்
தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் காட்டு யானைகள்
தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் காட்டு யானைகள்
ADDED : அக் 12, 2025 11:24 PM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தடியன்குடிசை வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த யானைகள் கடுகுதடி வழியாக எதிரொலிபாறை சீதாராம் ஓடை, ஜெரோனியம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில் சில நாட்களாக இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களை இரண்டு யானைகள் இடை மறிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது.
நேற்றிரவு 8:00 மணிக்கு பூலத்தூரிலிருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை அரை மணி நேரம் யானைகள் மறித்தன. யானைகள் வனப் பகுதிகளுக்குள் சென்றவுடன் பஸ் புறப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.