'கொடை'யில் பூத்துக் குலுங்கும் வைல்ட் ஜெர்ரி பூக்கள்
'கொடை'யில் பூத்துக் குலுங்கும் வைல்ட் ஜெர்ரி பூக்கள்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 03:22 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வைல்ட் ஜெர்ரி பூ அழகுற பூத்துள்ளதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
அந்நிய நாட்டைச் சேர்ந்த வைல்ட் ஜெர்ரி பூ மரங்கள் கொடைக்கானல் வனப்பகுதிகளில் ஏராளமாக உள்ளன. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் பூக்கத் துவங்கி அக்டோபரில் நிறைவடையும் இவ்வகை இளம் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் இவ்வகை மலர்களை சுற்றுலாப் பயணிகள் நகர் முழுவதும் கண்டு ரசித்துச் செல்கின்றனர். குறிப்பாக இதன் பூக்களில் தேனீக்கள் ரீங்காரம் இட்டு தேன் சேகரிக்கும் காலமாக உள்ளது. கொடைக்கானல் முழுவதும் அதிகளவில் பூத்துக்குலுங்கும் வைல்ட் ஜெர்ரி பூ சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
