ADDED : ஜன 27, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி மங்களப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் உள்ளது ஒற்றன் குன்று.
இந்த மலைக்குன்று பகுதியில் நேற்று காட்டுத் தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
