தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' அண்ணா பூங்கா புத்துயிர் பெறுமா

 'கொடை' அண்ணா பூங்கா புத்துயிர் பெறுமா

 'கொடை' அண்ணா பூங்கா புத்துயிர் பெறுமா


ADDED : ஜூன் 17, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் ஏரிச்சாலை, பிரையன்ட் பூங்கா அருகே அமைந்துள்ளது அண்ணா பூங்கா. 2012ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இப்பூங்காவை புனரமைத்து திறந்து வைத்தார்.

தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்ட பூங்காவை 2018ல் நகராட்சி தன் வசப்படுத்தியது. அன்று முதல் செயல்பாடின்றி பூங்கா புதர்மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக உருமாறியது. அவ்வப்போது கொடைக்கானலில் உள்ள கட்சியினர் இங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பூங்காவை பராமரித்து மலர்ச்செடிகள் நடவு செய்வதன் மூலம் வருகை தரும் பயணிகள் பூங்காவையும் ரசித்துச்செல்ல ஏதுவாக அமையும். கடந்த சீசனின் போது கலெக்டராக இருந்த சரவணன் நடவடிக்கையால் பூங்கா தூய்மைப்படுத்தப்பட்டு வளாகச்சுவர்களுக்கு வர்ணம் பூசி குப்பைகள் அகற்றப்பட்டு பளிச்சிடுகிறது.ங்காவை தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைத்து மலர்ச்செடிகள் நடுவதன் மூலம் பிரையன்ட் பூங்கா எதிரே உள்ள அண்ணா பூங்கா புத்துயிர் பெறும். கலெக்டர் துர்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us