ADDED : ஜூலை 11, 2025 03:22 AM
குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்னை காரணமாக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கிணற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது
பாளையம் மொடக்கு சாலையை சேர்ந்தவர் உமாநாத் மனைவி மலர்க்கொடி 40. உமாநாத் குஜராத்தில் கடை வைத்துள்ளார். இவர்களது மகன் பிரவீன் 23, கோவையில் எலக்ட்ரீசியனாக உள்ளார் .
இவர்களது வீடு அருகே குடியிருப்பவர் பாலகுரு 25. திருமணம் ஆகவில்லை. மலர் கொடியின் வீட்டை தாண்டி அவர்களது பட்டா பாதையில் தான் பாலகுரு தனது வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏற்கனவே இருவரது குடும்பத்தினர் இடையே பாதை பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் மலர்க்கொடியின் வீட்டில் இரவில் புகுந்த பாலகுரு மலர் கொடியை கடுமையாக தாக்கி தோட்டத்து கிணற்றுக்குள் வீசி உள்ளார் மலர்கொடிக்கு நீச்சல் தெரிந்ததால் படி வழியாக தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றார்.
தற்போது கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். பாலகுரு தலைமறைவாகிவிட்டார்.குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.