/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தையை மீட்டு தர ரோட்டில் அழுது புரண்டு பெண் போராட்டம்
/
குழந்தையை மீட்டு தர ரோட்டில் அழுது புரண்டு பெண் போராட்டம்
குழந்தையை மீட்டு தர ரோட்டில் அழுது புரண்டு பெண் போராட்டம்
குழந்தையை மீட்டு தர ரோட்டில் அழுது புரண்டு பெண் போராட்டம்
ADDED : ஜன 12, 2025 05:10 AM

ஒட்டன்சத்திரம் : கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தர கோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் ரோட்டில் அழுது புரண்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன்நகரைச் சேர்ந்தவர் கணேசன்.இரவது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதில் பெண்,10 வயதில் மகனும் உள்ளனர்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறு ஏற்பட்டதால் தனித்தனியாக வசித்து வந்தனர். மகள் அப்பாவிடமும் மகன் அம்மாவுடனும் வளர்ந்து வந்தனர்.
மகனை பார்க்க அவ்வப்போது கணேசன் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் மகனை பார்க்க வந்த கணேசன் தன்னுடன் மகனை அழைத்து சென்று விட்டார்.
ஆத்திரமடைந்த மீனா மகனை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ரோட்டில் அழுது புரண்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் அவரை சமாதானம் செய்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண வலியுறுத்தினர்.