நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அடிவாரம் பகுதியில் துணிக்கடை பெண் உரிமையாளர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
பழநி மதனபுரத்தை சேர்ந்த பசீர்அகமது மனைவி பஷீராபேகம் 45. அடிவாரத்தில் சன்னதி வீதியில் துணிக்கடை வைத்துள்ளார்.
பஷீராபேகத்தின் கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மதனபுரத்தை சேர்ந்த சவரத்தொழிலாளி மாரியப்பன் 50, உடன் சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது.
சில நாட்களாக மாரியப்பனுடன் பேசுவதை பஷீராபேகம் தவிர்த்துள்ளார். நேற்று காலை பஷீரா பேகத்தின் கடைக்கு சென்று தகராறு செய்த மாரியப்பன் கத்தியால் பஷீரா பேகத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதன் பின் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

