/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்புகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல்
/
ஆக்கிரமிப்புகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல்
ADDED : டிச 23, 2025 07:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
இதுதவிர குழந்தைகள் பொழுதுப்போக்குக்காகவும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இங்கு உள்ளன.
இந்நிலையில் பூங்காவை சுற்றி உள்ள இடத்தில் செயல்படும் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பூங்காவுக்கு பயிற்சிக்காக வரும் இளம் பெண்களை ரோட்டோரக்கடைகளில் நிற்பவர்கள் கேலி, கிண்டல்கள் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பூங்காவுக்கு வருவதற்கே பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
ஆக்கிரமிப்பு குறித்தும், பெண்கள் மீதான விமர்சனங்கள் குறித்தும் வார்டு கவுன்சிலர், போலீஸ் ஆகியோரிடம் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. காலை, மாலை இரு வேளையிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், முதியோர் என பலத்தரப்பட்ட மக்களும் கடந்து செல்லும் முக்கியப் பகுதியில் பெண்கள் பாதுகாப்பை கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

