UPDATED : செப் 28, 2026 05:54 PM
ADDED : செப் 28, 2026 04:32 PM
பழநி:மானுார் பகுதியில் குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் உள்ளதாக கூறி அப்பகுதி பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பழநி அருகே மானுார் ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் பண்ணைக்கு 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் நெடுந்துாாரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. குடிநீர் விநியோகம் செய்வதிலும் பாரபட்சம் உள்ளதாக புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பழைய தாராபுரம் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்திய தொப்பம்பட்டி பி.டி.ஓ., சுவாமிநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
