ADDED : மார் 08, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வேடசந்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. சங்கத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
சார்பு நீதிபதி விஸ்வநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பீட்டர், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பவித்ரா முன்னிலை வகித்தனர். பெண் வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துரை, நினைவு பரிசு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், கோர்ட் போலீசார் பங்கேற்றனர்.
