தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓய்வின்றி உழைத்தால் வெற்றி நத்தம் விஸ்வநாதன் அறிவுரை

 ஓய்வின்றி உழைத்தால் வெற்றி நத்தம் விஸ்வநாதன் அறிவுரை

 ஓய்வின்றி உழைத்தால் வெற்றி நத்தம் விஸ்வநாதன் அறிவுரை


ADDED : ஏப் 03, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: ''ஓய்வின்றி உழைத்தால் இமாலய வெற்றி பெறலாம் ''என நத்தம் அ.தி.மு.க.,வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் கட்சி யினருக்கு அறிவுரை வழங்கினார்.

செந்துறையில் நடந்த நத்தம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆட்சி இருந்தாலும் சரி இல்லை என்றாலும் மக்களுடைய மனம் அறிந்து , சிரமம் அறிந்து செயல்படுபவர் தான் திறமையான சட்டபை உறுப்பினராக இருக்க முடியும். அந்த வகையிலே மக்களின் மனங்களை அறிந்தவன் நான். மக்களுக்கு எது சரியாக இருக்கும், எதை வரவேற்பார்கள் என தெரிந்து அதற்கேற்றவாறு செயல்படுவது தான் எனது குறிக்கோளாக இருக்கும். வீண் விளம்பரங்களில் நம்பிக்கை இல்லை. நத்தம் தொகுதி மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

தேர்தல் பணியில் சுணக்கம் காட்டாமல் ஓய்வின்றி உழைத்தால் இமாலய வெற்றி பெறுவது உறுதி. வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சின்னு, ஜெயபாலன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ,ஒன்றிய, நகர அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us