/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டிங் மிஷனில் கழுத்து அறுபட்டு தொழிலாளி பலி
/
கட்டிங் மிஷனில் கழுத்து அறுபட்டு தொழிலாளி பலி
ADDED : நவ 30, 2024 02:24 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ரீவைண்டிங் கடையில் வேலை செய்தபோது கட்டிங் மிஷினில் கோளாறு ஏற்பட்டு, தொழிலாளி கழுத்து அறுபட்டு இறந்தார்.
திண்டுக்கல் கக்கன்நகரை சேர்ந்தவர் காசிலிங்கம்55. என்.வி.ஜி.பி.,தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் ரீவைண்டிங் கடையில் வேலை பார்த்தார். நேற்று காலை கட்டிங் மிஷனில் இரும்பு பைப்புகளை அறுத்து கொண்டிருந்தார். அப்போது கட்டிங் மிஷின் பழுதாகி அதில் இருந்த பிளேடு காசிலிங்கத்தின் கழுத்தை அறுத்தது. அவர் இறந்தார்.
முதலில் காசிலிங்கத்தை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து அங்கிருந்து தப்பியதாக தகவல்கள் வெளியாகின. போலீசார் விசாரணையில் கட்டிங் மிஷினில் ஏற்பட்ட கோளாறால் இறந்தது தெரிந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

