ADDED : ஆக 23, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: நத்தம் சாத்தாம்பாடி சாத்தான் 35.
மனைவி கஸ்துாரி 32. இரு மகள்கள் உள்ளனர். தற்போது சாத்தான், வேடசந்துார் கல்வார்பட்டியில் தனியார் தோட்டத்தில் தங்கி, தோட்ட வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8:50 மணி அளவில் கல்வார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மோதி நடந்த விபத்தில் சாத்தான் பலத்த காயம் அடைந்தார். வேடசந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
