ADDED : மே 08, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் காட்டுமாடு தாக்கி கூலித் தொழிலாளி பலியானார்.
கொங்கபட்டியை சேர்ந்தவர் செல்வம் 57.நேற்று முன்தினம் கொங்கபட்டி தனியார் தோட்டத்தில் வேலைக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.வத்தலக்குண்டு வனத்துறையினர் இறந்தவரின் குடும்பத்திற்கு முதற்கட்ட நிதி உதவி அளித்தனர்.
தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து மலைப்பகுதியில் யானை, காட்டுமாடு தாக்கி விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் பலியாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
