ADDED : ஆக 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஆக.21-
அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் பகுப்பாய்வு பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பினிக் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி உயிரியல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மைய ஆலோசகர் நாகரத்தினம், சென்னை இந்திய தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி நவீன்குமார் பங்கேற்று நவீன கால ஆராய்ச்சி, அதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். துணை பேராசிரியர் அனா ஹீபா தொகுத்து வழங்கினார். துணை பேராசிரியர் ஆசைகுமார் நன்றி கூறினார். பயிலரங்கம் ஆக.,25 வரை நடக்கிறது.
