ADDED : ஏப் 23, 2024 06:27 AM
சித்தையன்கோட்டை :சித்தையன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக புத்தக, புவி தின விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். கிளை நுாலகர் வாசுகி, பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி முன்னிலை வகித்தனர். புரவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.
தன்னார்வ ஆசிரியர் ராமு, பேரூராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் 80 பேருக்கு, சொந்த செலவில் சந்தா செலுத்தி நுாலக உறுப்பினராக சேர்த்து விட்டார். ஆசிரியர்கள் சரஸ்வதி, பிரியதர்ஷினி, ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
...........
கிணற்றுக்குள் மிதந்த சாக்கு மூடை
வேடசந்துார் : கல்வார்பட்டி வாங்கலாபுரத்தில் மெயின் ரோட்டோரம் பொதுக்கிணற்றில் சாக்கு மூடை மிதந்தது. வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மூடையை கயிற்றால் கட்டி மீட்டனர் .மூடையை பிரித்து பார்த்த போது கோயிலுக்கு சென்று வந்த காவி வேட்டி, , மாலைகளும் இருந்தது கிணற்றுக்குள் வீசிய நபரை போலீசார் தேடுகின்றனர்.
............
ஆலோசனை முகாம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தின் சார்பில் பள்ளி, விடுதியில் தங்கி பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‛விழுதுகளை வேர்களாக்க' என்ற தலைப்பிலான உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். ஆலோசகர்கள் மதி, கிறிஸ்டோபர், மைக்கேல் ராஜ் பேசினர். ஆதிதிராவிடர் நல தனிதாசில்தார்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
