தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உலக மக்கள் தொகை  தின விழிப்புணர்வு

உலக மக்கள் தொகை  தின விழிப்புணர்வு

உலக மக்கள் தொகை  தின விழிப்புணர்வு


UPDATED : ஜூலை 14, 2026 10:10 PM

ADDED : ஜூலை 14, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 10:10 PM ADDED : ஜூலை 14, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:உலக மக்கள் தொகை தினம் முன்னிட்டு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்பநல இயக்ககம் சார்பில் திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஊர்வலம், ரத பவனியை கலெக்டர் துர்கா துவக்கி வைத்தார். பூ மார்க்கெட், காமராஜர் சிலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் சிறார் திருமணத்தை தடுப்போம், ஒன்று பெற்றால் ஒளிமயம், பெண்ணின் திருமண வயது 21 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

முன்னதாக கலெக்டர் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

குடும்ப நலத்துறை துணை இயக்குநர் கவுசல்யாதேவி, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார், பழநி மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் ரவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us