ADDED : பிப் 18, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை பஞ்சமி யாக பூஜை நடந்தது.
தேய்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

