UPDATED : அக் 20, 2026 05:35 PM
ADDED : அக் 20, 2026 05:32 PM
கன்னிவாடி: மக்காச்சோள சாகுபடியில் படைப் புழுக்களின் தாக்கம் காரணமாக கன்னிவாடி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
போதிய மழை இல்லாத சூழலில் தண்ணீர் பற்றாக்குறை, கொளுத்தும் வெயிலால் சில ஆண்டுகளாக வழக்கமான சாகுபடி தொடர்ந்து பாதிப்பை அளித்து வருகிறது. வெங்காயம் பயறுவகை கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. மக்காச் சோள சாகுபடி பரப்பு, அதிகரிக்க துவங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடியில் மகசூல் கிடைத்தும் விலை குறைவாக இருந்தது. 3 ஆண்டுகளாக, படைப்புழு தாக்குதல், பால் பிடிக்கும் பருவத்தில் பெய்யும் மழை போன்றவை மகசூலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, வட்டப்பாறை, கசவனம்பட்டி, வண்ணம்பட்டி வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காய்பட்டி பகுதியில், 15 முதல் 25 நாட்கள் பயிராக தற்போது சாகுபடி உள்ளது. பரவலாக படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக விவசாயிகள் மீண்டும் கவலையில் உள்ளனர். இதனால் வேளாண்துறையினர் ஆலோசனைப்படி, படைப்புழு கட்டுப்படுத்துவதற்கான மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
