தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : பிப் 11, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர்ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்திக்கும், ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடந்தது

திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது.

*வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us