தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிவகங்கை இளம்பெண்களை காரில் கடத்தி பலாத்காரம் இரு தொழிலாளர்கள் கைது

 சிவகங்கை இளம்பெண்களை காரில் கடத்தி பலாத்காரம் இரு தொழிலாளர்கள் கைது

 சிவகங்கை இளம்பெண்களை காரில் கடத்தி பலாத்காரம் இரு தொழிலாளர்கள் கைது


ADDED : ஜூலை 04, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு சிவகங்கையை சேர்ந்த இரு இளம்பெண்களை காரில் கடத்தி வந்து பலாத்காரம் செய்த டைல்ஸ் தொழிலாளர்கள் இருவரை சாணார்பட்டி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்கள் இருவர் கண் மருத்துவமனைக்கு செல்ல சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக நேற்று முன்தினம் மாலை காத்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த இருவர் இளம் பெண்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர். பின் இருவரையும் கண் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விடுவதாக கூறி காரில் ஏற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு இளம்பெண்களை கடத்தி வந்த அவர்கள் அங்குள்ள விடுதியில் வைத்து பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் அவசர உதவி எண் 100க்கு அழைத்து இளம்பெண்கள் உதவிக்கேட்டு அழுதனர்.

எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி டி.எஸ்.பி., சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சத்தியபிரபா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு இளம்பெண்களையும் மீட்டனர்.

அவர்களை கடத்தியது காரைக்குடியைச் சேர்ந்த டைல்ஸ் கறை நீக்கும் தொழிலாளர்கள் ராஜபாண்டி 35, சத்தியராஜ் 43, என தெரிந்தது. இருவரையும் சாணார்பட்டி மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us