
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி நகர அரிமா சங்கம் சிவாலயா யோகா மையம் சார்பில் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் யோகாசன போட்டி நடைபெற்றது.
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், சேலம், கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பகுதியை சேர்ந்த யோகாசன பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நீண்ட நேரம் நிற்கும் போட்டி, சக்கராசனம் , ஐந்து ஆசனங்கள் செய்யும் போட்டிகள் நடைபெற்றது.
சாம்பியன் பட்டத்தை பொள்ளாச்சியை சேர்ந்த வாமதேவா யோகா மைய மாணவி ராஜவைஸ்யா பெற்றார்.
சிவாலய யோகா மைய நிர்வாகி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

