/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் 'திக் திக்'

UPDATED : ஏப் 25, 2024 05:00 PM
ADDED : ஏப் 25, 2024 04:59 PM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. இந்த அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர்பலகைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் மொழிகளில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்; அதை பார்த்து பயணிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் தயாராக இருந்தது.