ADDED : நவ 27, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி 60 நவ.19 ல் டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது பின்னால் சின்னமலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது.
தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.

