நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: ராஜக்காபட்டி சிறுகுளம் பகுதி புளிய மரத்தில் 30 வயது ஆண் ஒருவர் துாக்கிட்டு இறந்து கிடந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுமணி விசாரணையில் பொள்ளாச்சி வால்பாறையை சேர்ந்த அருண்குமார் 31,என்பது தெரிந்தது.
இவர் சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வந்தார். ராஜக்காபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் வேறு இடத்தில் திருமணம் முடிந்ததால் வேதனையில் இருந்துள்ளார். துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

