sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கடந்த முறை 'பட்டி'யில் அடைப்பு தற்போது 'டக் வாக்' முறைஈரோட்டில் யுக்தியை மாற்றிய தி.மு.க.,

கடந்த முறை 'பட்டி'யில் அடைப்பு தற்போது 'டக் வாக்' முறைஈரோட்டில் யுக்தியை மாற்றிய தி.மு.க.,

கடந்த முறை 'பட்டி'யில் அடைப்பு தற்போது 'டக் வாக்' முறைஈரோட்டில் யுக்தியை மாற்றிய தி.மு.க.,


ADDED : ஜன 30, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடந்த முறை 'பட்டி'யில் அடைப்பு தற்போது 'டக் வாக்' முறைஈரோட்டில் யுக்தியை மாற்றிய தி.மு.க.,

ஈரோடு :ஈரோடு கிழக்கு தொகுதியில், நாம் தமிழர் கட்சியினர் டிபாசிட் பெற்று விடக்கூடாது என்பதற்காக, வழக்கமான பிரசார யுக்தியை கைவிட்டு, கடந்த இரு நாட்களாக வாக்காளர்களை வீதிகளில் அழைத்து சென்று, கவனிப்பு வழங்கும் யுக்திக்கு தி.மு.க.,வினர் மாறியுள்ளனர். இதை அவர்களே, 'டக் வாக்' என கூறி கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், பிப்., 5ல் நடக்கிறது. தி.மு.க.,வும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளனர். கடந்த, 2023ல் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வாக்காளர்களை பட்டியில் அடைத்து, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சந்திக்காத வகையில், தி.மு.க.,வினர் பார்த்து கொண்டதுடன், வகை வகையான உணவு, கவனிப்பை வழங்கினர்.

தி.மு.க.,வில் உள்ளூர் அமைச்சர் முத்துசாமி தவிர வேறு யாரும் இல்லாதது, பிரசாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், ஈ.வெ.ரா., பேசியதாக கூறி சீமான் பேசிய பேச்சுக்கள், மக்களிடம் சென்றுள்ளது. முற்போக்கு அமைப்புகள் எனக்கூறி சில அமைப்புகள் மட்டுமே, சீமானுக்கு பதிலடி பேசும் நிலையில், தி.மு.க.,வினர் அடக்கி வாசிக்கின்றனர்.

இம்முறை தி.மு.க., அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெல்லாது. நா.த.க., ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்; டிபாசிட் பெறும் வாய்ப்புள்ளது என, உளவுப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.த.க., டிபாசிட் பெறக் கூடாது என, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த இரு நாட்களாக வழக்கமான பிரசார யுக்தியை மாற்றியுள்ளனர்.

காலை, மாலையில் அந்தந்த பகுதியில், 2, 3 குழுவாக கட்சியினர், கூட்டணியினர், பொதுமக்களை அழைத்து வீதி வீதியாக ஊர்வலமாக பிரசாரம் சென்று, அங்குள்ள கட்சி அலுவலகம், கட்சி பிரமுகர் வீட்டில் நிறைவு செய்து உணவுடன், கவனிப்பும் வழங்க துவங்கி உள்ளனர்.

இதை தி.மு.க.,வினரே, 'கடந்த முறை பட்டியில் அடைத்தோம், இம்முறை 'டக் வாக்' என்ற மேய்ச்சலுக்கு வாத்தை அழைத்து செல்கிறோம்' என கூறி கிண்டல் அடித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us