sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே'தைப்பூச விழா கோலாகலம்; முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

/

'குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே'தைப்பூச விழா கோலாகலம்; முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

'குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே'தைப்பூச விழா கோலாகலம்; முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

'குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே'தைப்பூச விழா கோலாகலம்; முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்


ADDED : பிப் 12, 2025 01:11 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைப்பூச தினமான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முருகப்

பெருமான் ஆலயங்களிலும், பக்தர்கள் குவிந்ததால், விழா களை கட்டியது. சென்னிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தைப்பூச தேர்

இழுக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ர மணிய சுவாமி கோவிலில், நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக அதிகாலை, 3:௦௦ மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து காலை, 6:15 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவ மூர்த்திகள், 6:25 மணிக்கு தேர்நிலையை அடைந்தனர்.

தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து, ௬:35 மணிக்கு மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர். முதல் தேரில் விநாயக பெருமான், பெரிய தேரில் முருப்பெருமான் சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினர். இதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் தலைமையில் சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து, ௬:40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். அப்போது கந்தனுக்கு அரோகரா; முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் முருக கோஷம் விண்ணைத் தொட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு-மிளகு, நிலக்கடலை, நெல் துாவி வழிபட்டனர். 6:55 மணிக்கு தெற்கு ராஜவீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது, இன்று மாலை, 5:20 மணிக்கு தேர் நிலை அடைகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு தேவஸ்தான மண்டபத்தில் தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

* ஈரோடு அருகேயுள்ள திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், அதிகாலை, 4:00 மணி முதல் 5:00 மணி வரை முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். இதேபோல் கருங்கல்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிபாளையம் மலை கோவில் எனப்படும் பால முருகன் கோவில், பார்க் சாலை முருகன் கோவில், ஈரோடு கோணவாய்க்கால் முருகன் கோவில், ஈரோடு சாஸ்திரி நகர் பால முருகன் கோவில், ஈரோடு ரயில்வே காலனி விநாயகர் கோவிலில் உள்ள

பால சுப்பிரமணியர் சுவாமிக்கு நேற்று அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான

பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* அந்தியூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 1,008 பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் வந்தனர். இதையடுத்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதேபோல் ஆப்பக்கூடல் கணேசபால தண்டாயுதபாணி மலைக்கோவிலில் தேரோட்டம் நடந்தது.

* கோபி பச்சைமலை முருகன் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு மகன்யாச அபிஷேகம், 5:00 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை, காலை, 7:00 மணிக்கு திருப்படி திருவிழா, ௭:30 மணிக்கு காவடி அபிஷேகம், ௮:30 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் குவிந்ததால் பச்சைமலை பிரதான சாலை மட்டுமின்றி, அடிவாரம் முதல் மலைப்பாதை வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* சத்தி தவளகிரி தண்டாயுதபாணி கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து ஊர்வலமாக வந்தனர். இதேபோல் வடவள்ளி முருகன் கோவில், கே.என்.பாளையம் கொருமடுவு பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா களை கட்டியது.

* குருவரெட்டியூரை அடுத்த வெள்ளிக்கரடு வெள்ளிமலையில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பவானி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். இரட்டைக்கரட்டில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா உற்சாகத்துடன் நடந்தது.

* நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து காலை, 6:00 மணி முதல், 7:30 வரை ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

*புன்செய்புளியம்பட்டி சுப்பிர மணியர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியருக்கு

பல்வேறு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமான், சப்பரத்தில் கோவில் உலா வந்தபோது, காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

* புன்செய்புளியம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையத்தில், பழமையான பொன்மலை ஆண்டவர் கோவிலில், தைப்பூச விழா தேரோட்டம் நேற்று மதியம் வெகு விமரிசையாக நடந்தது. முதலில் சிறிய தேரும், பிறகு பெரிய தேரும் இழுக்கப்பட்டது. கொண்டையம்பாளையத்தின் நான்கு ரத வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் தேரில் வந்த சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். இரவு தேர்கள் நிலை அடைந்தன.

* நம்பியூர் அருகேயுள்ள திட்டமலை குழந்தை குமாரசாமி கோவில், பொன் நாகமலை சுப்பரமணிய சுவாமி கோவில், வேமாண்டம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவில்களில் தைப்பூச விழா அமோகமாக நடந்தது.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us