/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருங்கத்தொழுவு நுாலக கட்டடம் சேதம்சுவர்களில் விரிசல் - மழை வந்தால் ஒழுகல்

ADDED : ஜன 24, 2025 01:21 AM
முருங்கத்தொழுவு நுாலக கட்டடம் சேதம்சுவர்களில் விரிசல் - மழை வந்தால் ஒழுகல்
சென்னிமலை, :சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில், கிளை நுாலகம் செயல்படுகிறது. நுாலகத்தில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. ஆண்டு தோறும், 50 ஆயிரம் ரூபாய் செலவில், தினசரி நாளிதழ், வார, மாத இதழ் வாங்கப்படுகிறது. கட்டடத்தை முறையாக பராமரிப்பு செய்யாததால், பல்வேறு இடங்களில் இடிந்துள்ளது. கட்டடத்தின் கூரையில் சிமென்ட் காரை அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.
சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஷன் ஷேடுகள் இடிந்து, எக்ஸ்-ரே படத்தை போல் கம்பிகள் வெளியில் தெரிந்து, வாசகர்களை அச்சப்படுத்துவதாக உள்ளது. மழை பெய்யும்போது கட்டடத்துக்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு நுால்களும் நனைந்து வீணாகின்றன. மேலும் நுால்களை அடுக்க போதிய அலமாரி இல்லாததால் ஆங்காங்கே குவிந்தும், குப்பையாகவும் கிடக்கிறது. அமர்ந்து படிக்க பெஞ்ச் வசதி, மின்விசிறி இல்லை. மொத்தத்தில் திரும்பிய திசையெங்கும் குறையாக காணப்படும் நுாலகத்தை, உரிய வகையில் சீரமைக்க, வாசகர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.