/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நோகாமல் நோன்பு கும்புடுவது என்றால் இதானோ?' பேரிகார்டில் ஜொலித்த விளம்பரங்கள்

ADDED : ஜன 17, 2025 01:01 AM
'நோகாமல் நோன்பு கும்புடுவது என்றால் இதானோ?' பேரிகார்டில் ஜொலித்த விளம்பரங்கள்
சென்னிமலை: சென்னிமலையில் குமரன் சதுக்கம், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு என முக்கிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், போலீசார் சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிலர் விளம்பர தட்டி, சிறு பிளக்ஸ், பேனர்களை கட்டியிருந்தனர். சென்னிமலையில் நேற்று ரோந்தில் ஈடுபட்ட பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்ணில் இது பட்டு விட்டது.
'நாம அலைந்து திரிந்து, விளம்பரதாரரை பிடித்து, பேரிகார்டை தயார் செய்து கொண்டு வந்து வைத்தால், இப்படி தங்கள் விளம்பரங்களை வைத்து, விளம்பரம் தேடி கொள்கிறார்களே?' என்று அதிர்ச்சி அடைந்து, விளம்பர பேனர், தட்டிகளை உடனடியாக அகற்ற செய்தார். அத்தோடு நின்றால் போலீஸ் கெத்து எப்படி தெரியும்? விளம்பர தட்டிகளில் இருந்த நிறுவனங்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்ட போக்குவரத்து போலீசார், 'இனி பேரிகார்டுகளில் இதுபோல் விளம்பர பலகைகளை கட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என எச்சரித்தனர். 'நோகாமல் நோன்பு கும்புடுவது என்றால் இதுதானோ?'