sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கலகத்தை உருவாக்க நினைக்கும் கவர்னர் இ.கம்யூ., மாநில செயலாளர் வருத்தம்

கலகத்தை உருவாக்க நினைக்கும் கவர்னர் இ.கம்யூ., மாநில செயலாளர் வருத்தம்

கலகத்தை உருவாக்க நினைக்கும் கவர்னர் இ.கம்யூ., மாநில செயலாளர் வருத்தம்


ADDED : ஜன 29, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கலகத்தை உருவாக்க நினைக்கும் கவர்னர் இ.கம்யூ., மாநில செயலாளர் வருத்தம்

ஈரோடு,:பிரச்னைகளை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக கவர்னர் பேசுகிறார்,'' என்று, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, நேற்று பிரசாரம் செய்ய வந்தவர், முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:

வக்பு வாரிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு கூட்டு குழு நடவடிக்கைக்கு அனுப்பட்டுள்ளது. ஆளும்கட்சி, அதன் தோழமை கட்சிகள் கொடுத்த திருத்தம் ஏற்கப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் திருத்தம் ஏற்கப்படவில்லை. காலை சிற்றுண்டி திட்டத்தை, தனியார் நிறுவனத்திடம், தமிழக அரசு கொடுக்க கூடாது. ஈ.வெ.ரா., குறித்த பேசி தன்னை பெரிய தலைவராக காட்டி கொள்ள சீமான் நினைக்கிறார். சூரியனை பார்த்து நாய் குறைத்தால் என்ன ஆக போகிறது.

பிரச்னைகளை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் நோக்கில், தமிழக கவர்னர் ரவி பேசுகிறார். முதலில் அவர் கவர்னரா அல்லது அரசியல்வாதியா என சொல்ல வேண்டும். கவர்னர் தினமும் வள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிந்து எதற்கு மரியாதை செலுத்துகிறார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us