/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்களை வளர்ப்பதாக பெண் மீது புகார்சென்னிமலையில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

ADDED : ஜன 31, 2025 01:30 AM
தெருநாய்களை வளர்ப்பதாக பெண் மீது புகார்சென்னிமலையில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,
சென்னிமலை:சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி செட்டிதோட்டம் புதுாரில், வாடகை வீட்டில் வசித்து வரும் ஒரு பெண், 50க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு உணவளித்து வளர்த்து வருகிறார்.
இதனால் அப்பகுதியில் செல்லும் மக்களை கடிப்பதோடு, ஆடு, கோழிகளை கடிப்பதாகவும், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமாரிடம், அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் எம்.எல்.ஏ., நேற்று காலை ஆய்வு செய்தார். அந்த பெண்ணிடம், மக்களின் சிரமங்களையும், பாதிப்புகளையும்
கூறினார். இதையறிந்து திரண்ட மக்கள், உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த எம்.எல்.ஏ.,விடம் வலியுறுத்தினர். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் தெரிவித்த எம்.எல்.ஏ., ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். கலெக்டரிடம் மனு தரவும், மக்களுக்கு
அறிவுறுத்தினார்.