sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாட்ஸ் ஆப் குழுவில் பெண் கவுன்சிலர்களின்பெயர் நீக்கப்படும்; நகராட்சி சேர்மேன் உறுதி

/

வாட்ஸ் ஆப் குழுவில் பெண் கவுன்சிலர்களின்பெயர் நீக்கப்படும்; நகராட்சி சேர்மேன் உறுதி

வாட்ஸ் ஆப் குழுவில் பெண் கவுன்சிலர்களின்பெயர் நீக்கப்படும்; நகராட்சி சேர்மேன் உறுதி

வாட்ஸ் ஆப் குழுவில் பெண் கவுன்சிலர்களின்பெயர் நீக்கப்படும்; நகராட்சி சேர்மேன் உறுதி


ADDED : ஜன 31, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 31, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாட்ஸ் ஆப் குழுவில் பெண் கவுன்சிலர்களின்பெயர் நீக்கப்படும்; நகராட்சி சேர்மேன் உறுதி

கோபி: கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம், சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி தலைமையில், நேற்று நடந்தது.கூட்டத்தில் 12வது வார்டு கவுன்சிலர் சுமையாபானு: என் வார்டுக்கு வரும் பணியாளர்களை, பிற வார்டுகளுக்கு அனுப்புவது எந்த பிரயோஜனமும் இல்லை. எனது வார்டுக்கு வரும் பணியாளர்களை எதற்காக மற்ற வார்டுக்கு அனுப்புகிறார்கள்.

சுகாதார அலுவலர் சோழராஜ்: பணியாட்கள் வேறு வார்டு பணிக்கு ஈடுபடுத்த தான் வேண்டும்.ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வன்: ஒரு மாதமாக தெருவிளக்கு பிரச்னை குறித்து வலியுறுத்தி வருகிறேன். இதுகுறித்து நகராட்சியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து, பெண் கவுன்சிலரின் பெயரை நீக்கியுள்ளீர்கள். அப்படியானால் அனைத்து பெண் கவுன்சிலர்களின், கணவன்களின் பெயரையும் வாட்ஸ் ஆப் குழுவில் நீக்க வேண்டும்.

சேர்மன் நாகராஜ்: அனைத்து பெண் கவுன்சிலர்களின் கணவர் பெயரும், அந்த வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தப்படும். தெருவிளக்கு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்.

8 வது வார்டு கவுன்சிலர் குமார சீனிவாஸ்: கடந்த, 2022ல் வார்டுகளில் கொடுத்த பணி இதுவரை எதுவும் நடக்கவில்லை. எனவே இந்த கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார். இதையடுத்து தி.மு.க.,கவுன்சிலர்கள் ஐந்து பேர், 'தங்கள் வார்டுகளிலும் சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர், சாலை பராமரிப்பு பணி நடக்கவில்லை. எனவே கூட்டத்தில் உள்ள அனைத்து பொருளையும் ஒத்தி வைக்க வேண்டும்' என்று சேர்மன் நாகராஜிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கூட்டம் மதியம், 1:00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு, 1:25 மணிக்கு தொடங்கியது. அப்போதும், ஒத்தி வைக்கும் மனு கொடுத்த தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர், 'தீர்மானத்தை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும்' என்று சேர்மேனிடம் மனு கொடுத்தனர். இதனால் மறுதேதி குறிப்பிடாமல் நகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

காலைக்கதிர் நாளிதழை காட்டிஅ.தி.மு.க., கவுன்சிலர் கேள்விகூட்டத்தில் ஒன்பதாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் பேசுகையில், 'கோபி எரிவாயு தகன பூங்கா ஐந்து மாதங்களாக இயங்கவில்லை. இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதுகுறித்து காலைக்கதிர் நாளிதழில் செய்தி வந்துள்ளது என்று கூறியவர், நாளிதழை அனைவரும் பார்க்கும் படி உயர்த்தி காட்டினார். எதனால் பூட்டி வைத்துள்ளீர்கள். எப்போது பயன்பாட்டுக்கு வரும்' என்றார். சேர்மன் நாகராஜ் கூறுகையில், 'யாரும் தடுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் பணி செய்கின்றனர். இன்னும் சில வேலைகள் முடிக்காமல் உள்ளது. பிப்.,15க்குள் எரிவாயு தகன பூங்கா திறக்கப்படும்'

என்றார்.






      Dinamalar
      Follow us