/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை டி.என்.பாளையத்தில் நோயாளிகள் தவிப்பு

ADDED : பிப் 09, 2025 01:11 AM
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை டி.என்.பாளையத்தில் நோயாளிகள் தவிப்பு
டி.என்.பாளையம் : கோபி தாலுகாவுக்கு உட்பட்ட டி.என்.பாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமையிடமாக கொண்டு, டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, காசிபாளையம், டி.ஜி.புதுாரில் - அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இவற்றில் அனுமதிக்கப்பட்ட, ௧௪ டாக்டர்களில், ௬ பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால் டி.என்.பாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு டாக்டர் அதுவும் தலைமை மருத்துவ அலுவலர் மட்டுமே பணிபுரிகிறார். சுகாதார நிலையத்துக்கு தினமும், ௨௦௦க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால், பணிச்சுமையால் செவிலியர்களை பணியில் அமர்த்தி விட்டு அவர்கள் சென்று விடுவதாக தெரிகிறது. தினமும் காலை, 9:௦௦ மணி முதல், 12:௦௦ மணிவரை புறநோயாளிகளை பார்க்க மட்டும் ஒரு மருத்துவர் உள்ளார். அதன் பிறகு டாக்டர் அறை பூட்டப்படுகிறது. இதனால், அவசர முதலுதவி சிகிச்சைக்காக வருபவர்கள், கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவ வைக்கப்படுவதாகவும், மக்கள் மத்தியில் வேதனை எழுந்துள்ளது.
டி.என்.பாளையம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் அவசர முதலுதவி சிகிச்சைக்காக, 15 கி.மீ., துாரம் கோபி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையால், உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. காலியாகவுள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்பி, 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.