sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாம்வனத்துறைக்கு மக்கள் கடும் எச்சரிக்கை

மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாம்வனத்துறைக்கு மக்கள் கடும் எச்சரிக்கை

மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாம்வனத்துறைக்கு மக்கள் கடும் எச்சரிக்கை


ADDED : பிப் 14, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 01:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாம்வனத்துறைக்கு மக்கள் கடும் எச்சரிக்கை

சத்தியமங்கலம், :சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, கடம்பூரை அடுத்துள்ள உகினியம் மலை கிராமத்தில் கடந்த மாதம், 16ம் தேதி இரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயி ராஜப்பனை ஒற்றை யானை தாக்கி கொன்றது.

இந்த யானை வனத்துக்குள் செல்லாமல், அவ்வப்போது உகினியம் மலை கிராமத்துக்குள் நடமாடி வருகிறது. இரவானால் வரும் ஒற்றை யானை, பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து

வருகிறது. நேற்று முன்தினம் சத்தி வனச்சரக பணியாளர்கள் உகினியம் பகுதியில் வரும்போது, ஆசனுார் வனச்சரக எல்லையில் யானை நடமாடியது. அந்த பகுதி தங்கள் எல்லை இல்லை என்பதால், யானையை விரட்டாமல் சென்று விட்டனர். மாலையில் ஊருக்குள் வரும் யானை, காலை, ௯:௦௦ மணி வரை மக்காச்சோள காட்டில் பதுங்கியபடி உள்ளது. அப்போது பைக்கில் செல்பவர்களை விரட்டுகிறது.

இதனால் தனியாக நடமாடவே அச்சமாக உள்ளதாக, உகினியம் மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் எல்லையை காட்டி ஒதுங்கி சென்றால், கிராம மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று

எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us