/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் விற்பனை குறித்து'ஆப்'பில் புகார் தெரிவிக்க யோசனை
/
போதை பொருள் விற்பனை குறித்து'ஆப்'பில் புகார் தெரிவிக்க யோசனை
போதை பொருள் விற்பனை குறித்து'ஆப்'பில் புகார் தெரிவிக்க யோசனை
போதை பொருள் விற்பனை குறித்து'ஆப்'பில் புகார் தெரிவிக்க யோசனை
ADDED : பிப் 19, 2025 02:01 AM
ஈரோடு:மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதை பொருள் இல்லா தமிழகம் மற்றும் அலைபேசி செயலி தொடர்பாக பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பணி, ஒரு டி.எஸ்.பி., - 2 இன்ஸ்பெக்டர்கள், 28 போலீசார் மூலமும், இதர போலீசார், கலால் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் அலைபேசி செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இச்செயலியை பள்ளி, கல்லுாரி முதல்வர் அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் பதிவிறக்கம் செய்வது மட்டுமின்றி, தங்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து, பள்ளி, கல்லுாரி அருகே போதை பொருள் விற்பனை குறித்து கண்டறிந்தால் புகார் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு பேசினார். உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, டி.எஸ்.பி., சண்முகம், அலுவலக மேலாளர் (கலால்) வீரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.