/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுவரை உடைத்து கிணற்றில் பாய்ந்த கார்விவசாயி, மீட்க முயன்ற மீனவரும் ப
/
சுவரை உடைத்து கிணற்றில் பாய்ந்த கார்விவசாயி, மீட்க முயன்ற மீனவரும் ப
சுவரை உடைத்து கிணற்றில் பாய்ந்த கார்விவசாயி, மீட்க முயன்ற மீனவரும் ப
சுவரை உடைத்து கிணற்றில் பாய்ந்த கார்விவசாயி, மீட்க முயன்ற மீனவரும் ப
ADDED : மார் 15, 2025 02:41 AM
சுவரை உடைத்து கிணற்றில் பாய்ந்த கார்விவசாயி, மீட்க முயன்ற மீனவரும் பலி
சத்தியமங்கலம்:சத்தி அருகே கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி பலியான நிலையில், அவரை மீட்க முயன்ற மீனவரும் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார், முள்ளிக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி யுவராஜ், 42; நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த காரை பின்
புறமாக எடுத்தபோது, தடுப்பு சுவரை உடைத்து கொண்டு, 50 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில், 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேடும் பணிக்கு மூன்று மீனவர்களை வரவழைத்தனர். காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி, இருவர் மேலே வந்து விட்ட நிலையில், பவானி சாகரை சேர்ந்த மூர்த்தி, 45, வெகு நேரமாகியும் மேலே வரவில்லை. இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று அதிகாலை மோட்டார்கள் வைத்து தண்ணீரை முழுவதும் வெளியேற்றினர். பிறகு கிரேன் உதவியுடன் கிணற்றில் கிடந்த காரை மீட்டனர். காருக்குள் யுவராஜ் சடலமாக கிடந்தார். அதேசமயம் மீனவர் மூர்த்தியும் சடலமாக மீட்கப்பட்டார். காருடன் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பலியான நிலையில், அவரை மீட்க வந்த மீனவரும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.