/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொன்னதை செய்யாத அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகம்அலுவலகத்தில் புகுந்து வியாபாரிகள் கடும் வாக்குவாதம்

ADDED : மார் 22, 2025 01:15 AM
சொன்னதை செய்யாத அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகம்அலுவலகத்தில் புகுந்து வியாபாரிகள் கடும் வாக்குவாதம்
அந்தியூர்:அந்தியூர் வாரச்சந்தை வணிக வளாகம், ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தரை தளத்தில் எட்டு கடை, மேல் தளத்தில் பத்து என, 18 கடைகள் உள்ளன. ஏலம் நடந்தபோது, கடைக்கு முன்புள்ள வாடகை கார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது. அப்புறப்படுத்தி கொடுப்பதாக பேரூராட்சி நிர்வாகமும் உறுதி அளித்தது.
இதையடுத்து கடை ஏலம் எடுத்தவர்கள், டீக்கடை, மருந்துக்கடை, ஐஸ்கிரீம் கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், கடைகளுக்கு முன்புள்ள வாடகை கார் ஆக்கிரமிப்புகளை, பேரூராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. இந்நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது.
அப்போது வாரச்சந்தை வணிக வளாக கடை ஏலம் எடுத்த பத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர். பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் சதாசிவத்தை முற்றுகையிட்டனர். வணிக வளாக கடைகளின் முன் ஆக்கிரமித்துள்ள வாடகை கார்களை அகற்றுவது எப்போது? என்று கேட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மூவரும் பதில் கூற முடியாமல் திணறினர். செயல் அலுவலர் உறுதியால், 20 நிமிடத்துக்கு பிறகு, வியாபாரிகள் அங்கிருந்து சென்றனர்.
ஏலம் ஒத்திவைப்புஅந்தியூர் பஸ் ஸ்டாண்ட் புதிய வணிக வளாக கடை, வாரச்சந்தை சுங்க வசூல் உரிமை, வாரச்சந்தை வணிக வளாக கடை, ஆட்டிறைச்சி கடை மற்றும் பஸ் ஸ்டாண்ட் நவீன கட்டண கழிப்பிடத்துக்கு, பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. தலை வர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். வரும், 2028ம் ஆண்டு வரை அனைத்து வகை இனங்களுக்கும் ஏலம் துவங்கியது. துவக்கம் முதலே ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைப்பதாக, செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்தார்.