/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வூதியர் இறந்தும் ஓய்வூதியம்வாரிசுதாரர்கள் ௩ பேர் மீது புகார்
/
ஓய்வூதியர் இறந்தும் ஓய்வூதியம்வாரிசுதாரர்கள் ௩ பேர் மீது புகார்
ஓய்வூதியர் இறந்தும் ஓய்வூதியம்வாரிசுதாரர்கள் ௩ பேர் மீது புகார்
ஓய்வூதியர் இறந்தும் ஓய்வூதியம்வாரிசுதாரர்கள் ௩ பேர் மீது புகார்
ADDED : ஜன 05, 2025 01:32 AM
பவானி, பவானி சார் கருவூல உதவி அலுவலர் பிரபா. பவானி போலீசில், இவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசில் பணியாற்றி ஓய்வடைந்து, பென்ஷன் பெற்று மரணமடைந்த மூவரின் வாரிசுகள், ஏழு மாதங்கள் வரை பென்ஷன்தாரரின் இறப்பை மறைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்த வகையில் பவானி, காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த சலீம் மகன் அலாவுதீன், ௨.௮௨ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதேபோல் கோபி பாலாஜி நகரை சேர்ந்த வைரமூர்த்தி, ௧.௩௧ லட்சம் ரூபாய்; கவுந்தப்பாடியை சேர்ந்த ரவிச்சந்திரன், ௪.௨௦ லட்சம் ரூபாய் என, மூவரும் சேர்ந்து, ௮.௩௩ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும், பவானி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.