/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழாசிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்பு
/
பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழாசிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்பு
பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழாசிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்பு
பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழாசிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்பு
ADDED : ஜன 17, 2025 01:03 AM
பெண்கள் மட்டுமே பங்கேற்ற விழாசிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்பு
ஈரோடு,: ஈரோட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழாவில், சிறுமி முதல் மூதாட்டி வரை பங்கேற்று, உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
ஈரோடு வ.உ.சி., பூங்காவில் ஆண்டுதோறும், காணும் பொங்கல் நாளில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆண்களில் சிறுவர்களுக்கு கூட அனுமதியில்லை. இதன்படி நடப்பாண்டு காணும் பொங்கல் விழா, வ.உ.சி., பூங்காவில் நேற்று கொண்டாடப்பட்டது. நண்பகலுக்கு பின் ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் குவிந்தனர். பெண் குழந்தை முதல் பேத்தி எடுத்த பாட்டிகள் வரை கலந்து கொண்டனர்.
ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்தனர். சினிமா குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு பலர் ஆட்டம் ஆடினர். சிலர் குச்சுப்புடி நடனமாடினர். தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை உறவுகள், தோழிகளுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்ததால், பூங்கா களை கட்டியது. இதையொட்டி பாதுகாப்பு பணியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.