/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்குநம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி தேர்வு

ADDED : ஜன 18, 2025 01:31 AM
தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்குநம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி தேர்வு
ஈரோடு, : இந்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து, தென்னிந்திய அறிவியல் கண்காட்சி போட்டிக்கு, தமிழக அளவிலான தேர்வு, திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ரிஷிக் ஆர்யா மற்றும் முகில் ஆகியோரின், நவீன அறிவியல் கருவிகளின் பயன்பாடு என்ற படைப்பு, ஏழாவது இடம் பெற்றது. இதையடுத்து பாண்டிச்சேரியில் வரும், ௨௧ம் தேதி முதல் ௨௫ம் தேதி வரை நடக்கவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சிக்கு, படைப்பு தேர்வானது.
சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.