/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலியால் அதிர்ச்சி
/
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலியால் அதிர்ச்சி
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலியால் அதிர்ச்சி
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலியால் அதிர்ச்சி
ADDED : ஜன 25, 2025 01:56 AM
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலியால் அதிர்ச்சி
பு.புளியம்பட்டி,: பவானிசாகரை அடுத்த இக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்தவர் கவுதம், 27; இவரின் மனைவி அசின். 20; தம்பதியின் மூன்று மாத பெண் குழந்தை டிக்னா.
தடுப்பூசி போடுவதற்காக, வெள்ளியம்பாளையம் புதுாரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு, குழந்தையை அசின் நேற்று கொண்டு சென்றார். அங்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட, அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய அசின், தொட்டிலில் துாங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை அசைவில்லாமல் இருந்தது.
அதிர்ச்சியடைந்த அசின் குழந்தையை எடுத்துக்கொண்டு, வெள்ளியம்பாளையம் புதுார் அங்கன்வாடி மையத்துக்கு சென்றார். செவிலியர் உடனடியாக சத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்து சத்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்து விட்டது. தடுப்பூசி செலுத்தியதே குழந்தை இறப்புக்கு காரணம் என்று, பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில், பெற்றோர் தரப்பில் புகார் தரப்பட்டது.
இதுகுறித்து பவானிசாகர் வட்டார மருத்துவ அலுவலர் சசிகலா கூறியதாவது: வெள்ளியம்பாளையம் புதுார் அங்கன்வாடி மையத்தில், ஆறு குழந்தைகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் குழந்தை டிக்னாவும் ஒன்று. குழந்தையின் இறப்புக்கான காரணத்தை, உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.